Thu. Jan 15th, 2026

மேட்டுப்பாளையம்- நெல்லை ரயிலை தினசரி ரயிலாக மாற்றிதிருச்செந்தூர் வரை நீட்டிக்க பயணிகள் கோரிக்கை

மேட்டுப்பாளைத்தில் இருந்து நெல்லை வரை செல்லும் ரயிலை தினசரி ரயிலாக மாற்றி திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநில பயணியர் நலச்சங்கத் தலைவர் சாந்தகுமார் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:- நெல்லை திருச்செந்தூர், திருச்செந்தூர்- நெல்லை இடையே இயக்கப்படும் ரயில்களில் கடந்த இருவாரங்களுக்கு மேலாக பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக நெல்லையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் ரயிலிலும், திருச்செந்தூரில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் ரயிலிலும், திருச்செந்தூர்-பாலக்காடு, பாலக்காடு-திருச்செந்தூர் ரயிலிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ_ மாணவிகள், ஆசிரியர்கள், அரசு தனியார் ஊழியர்கள் மிகவும் சிரப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ரயிலில் நின்றும், வாசலில் தொங்கி கொண்டும் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் மாலையிலும் பள்ளி, கல்லூரி அரசு அலுவலகம் முடிந்து திரும்ப வீடுகளுக்கு செல்லும் போதும் இதே நிலை தொடருகிறது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கும் நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்றி பயணிகள் நலன் கருதி திருச்செந்தூர் வரை நீடிக்க செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே இதுவிஷ யத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நெல்லையில் இருந்து காலையில் திருச்செந்தூருக்கு புறப்படும் ரயிலிலும், மாலையில் திருச்செந்தூரில் இருந்து புறப்படும் நெல்லை ரயி லிலும் மற்றும் திருச்செந்தூர்- பாலக்காடு ரயிலிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் மேட்டுப்பாளையம் நெல்லை ரயிலை தினசரி ரயிலாக மாற்றி திருச்செந்தூர் வரை நீடிக்க செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post