Thu. Jan 15th, 2026

பொன்னேரியில் யோகா சாம்பியன்ஷிப் போட்டி

பொன்னேரியில் யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பரிசுகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 2025 ஆம் ஆண்டிற்கான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

எம்.எஸ்.ஸ்போர்ஸ் மற்றும் யோகா அகாடமி ஃபுனாகோஷி’ஸ் எக்ஸ்லன்ட் கராத்தே-டு நடத்திய நிகழ்ச்சியில் யோகா போட்டிகளில் ஜூனியர் சீனியர் சூப்பர் சீனியர் பிரிவுகளில் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில்
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

மேலும் அகாடமியில் 5 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று கருப்பு பட்டை தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கருப்பு பட்டையினை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.

உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர் டி.எல்.சதாசிவலிங்கம், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் ஆபிரகாம் ஜெபகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். அகாடமி நிறுவனர் சிஹான் பழனி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

சிறப்பு விருந்தினர்களாக நரசிம்மன், லோகு, மகேந்திரன் மற்றும்
பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்சங்கர், முன்னாள் நகர தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் அத்திப்பட்டு புருஷோத்தமன், பழவேற்காடு ஜெயசீலன், சலீம், பாபு, சந்துரு நாகராஜ், சிற்பி ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Post