பன்னம்பாறை ஆவே மரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவில் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் தேசிய கொடி ஏற்றினார்.
சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை விளக்கில் உள்ள ஆவே மரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது ஆசிரியர் சங்கர் வரவேற்றார். பள்ளி தாளாளர் பீட்டர் ராஜ் தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக இத்தாலி நாட்டை சேர்ந்த மேத்யூ, ஜியாடா, பிரான் சொல்கா ஆகியோர் கலந்து கொண்டனர். மேத்யூ தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினரர்.
தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாணவ மாணவிகள் தேச தலைவர்கள் வேடமடைந்து அசத்தினர். இதில் விருதுநகர் அன்பு இல்ல தங்கம், உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை பிரிட்டா நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சொர்ணலதா, மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.

