சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்து தலைமை வைத்து தேசிய கொடி ஏற்றினார். இதில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் ஆறுமுக நைனார் நன்றி கூறினார்.

