தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே ஜெயசீலன் தலைமையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேருந்து நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் படி நடைபெற்று வருகிறது. இதன் அருகில், நாசரேத் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பேரூராட்சி அலுவலகம், நூலகம்.பல் ஆஸ்பத்திரி .உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் கடைகளும் அதிக அளவில் உள்ளன. பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு செல்போன் டவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போது அந்த பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக செல்போன் டவர் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதனை கண்டித்து , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏடி கே ஜெயசீலன் தலைமையில் அப்பகுதி மக்கள் நாசரேத் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, செல்போன் டவரால் முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

