Wed. Aug 20th, 2025

நாசரேத் நூலகத்தில் இலக்கிய கூட்டம்

நாசரேத் நூலகத்தின் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பில் மாதாந்திர இலக்கிய மன்றக் கூட்டம் நூலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு வள்ளுவர் வாசகர் வட்டத்தின் தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். நூலகர் பொன்ராதா முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய அமீரக எழுத்தாளர் சுந்தர் ஜெயராஜ் எழுதிய “சிறு ரொட்டி துண்டு” என்ற சிறுகதை நூல் திறனாய்வு செய்யப்பட்டது.  சிறுகதை நூலையும், நூலாசிரியரையும் தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் அறிமுகம் செய்து வரவேற்று பேசினார்.

இதில் பிள்ளையன் மனை நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் 3ம் ஆண்டு ஆங்கிலத்துறையில் பயிலும் மாணவிகள் கனகா, பாத்திமா பிளஸ்ஸி, சிவசங்கரி, ஜெனிஷா, ஷார்லின் ஜெஸி ஆகியோரது நூலை திறனாய்வு செய்து பேசினார்கள்.

நிகழ்வில் கவிஞர் சிவா சுதந்திர தின கவிதை வாசித்தார். டாக்டர் கவிஞர் மணிமொழிச் செல்வன், ஒய்வு பெற்ற பேராசிரியர் காசிராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் சிறுகதை நூலாசிரியர் சுந்தர் ஜெயராஜ் ஏற்புரை ஆற்றினார்.

இக் கூட்டத்தில் ஆசிரியர் அருள்ராஜ், முன்னாள் நாசரேத் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவி செல்வகுமார், முன்னாள் துணைத் தலைவர் மத்தேயு ஜெபசிங், தொழிற் சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ், டாக்டர் விஜய் ஆனந்த், ஏரல் லோபா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் முருகன், யூடீபர் மதன், மாணிக்கம், மனோகரன், ஆசிரியர் செல்வின், ஜான் பிரிட்டோ, ஆசிரியர் விபின் ஜெயக்குமார், ஜெபசிங், கந்தசாமி, பகவதிப் பாண்டியன், உடையார், சிவா, மந்திரம், எல்ஐசி ஏஜெண்ட் கிறிஸ்டோபர் மூத்த பத்திரிக்கையாளர் ஜோயல் உள்பட பலர் கலந்து கொண்டனர்

நிறைவாக தேசியகீதம்பாடப்பட்டது. இலக்கிய ஆர்வலர் கண்ணன் நன்றி கூறினார்.

த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *