நாசரேத் மர்காசிஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் கோயில் ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி போதை ஒழிப்பு திட்ட அலுவலர் பிரபாகர் வேதசிரோண்மணி , வேலைவாய்ப்பு அலுவலர் ஜான் வெஸ்லி, பர்சர் தனபால் ஆகியோர் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்வை சிறப்பாக நடத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் சந்தோசம் தலைமையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெண்கள் பள்ளிகளின் தாளாளர் முனைவர் ரமா மற்றும் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ், ஜான் வெலிங்டன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655