திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய ஆடி மாத நான்காம் வார திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அன்னதானம் வழங்கினர் .
மாவட்டச் செயலாளர் ராஜினி மற்றும் வழக்கறிஞர் பிரிவு இளையராஜா ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காப்பு கட்டிய பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கினார்.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் அன்பாலாயா சிவகுமார், பொதுச் செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் நீலகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கமணி, முன்னாள் மாவட்ட துணை தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் கவிதா, பட்டியல் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் பிரபு, வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் வேல்மாரியப்பன், பொன்னேரி முன்னாள் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஆனந்தன், மூத்த நிர்வாகி முனி கிருஷ்ணன் மற்றும் பாஜக நிர்வாகிகள் நட்ராஜ், ராஜ்குமார், ரமேஷ், சீனிவாசன், குப்பன், ஜெகதீஷ், ஆகாஷ், நிஷா உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் உடன் இருந்தனர்.