தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனைத்துறை மற்றும் வெர்னர் காலேஜ் ஆப் ப்ரிச்சிங் இணைந்து சுற்றுச்சூழல் கருத்தரங்கு திருமறையூர் மறுரூப சிற்றாலயத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பமாக கடையனோடை சேகர தலைவர் ஆசீர் சாமுவேல் ஜெபித்து ஆரம்பித்து வைத்தார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல துறைகளின் இயக்குனர் முனைவர் ஆல்பரட் ஸ்டீபன் கருத்துரை வழங்கினார். பின்னர் மதியம் நடைபெற்ற அமர்வில் போலந்து நாட்டின் பாலினா மற்றும் ஷியஷ் வனவிலங்கு பாதுகாப்பு பற்றிய தங்கள் ஆராய்வினை விளக்கிக் கூறினார்கள். முனைவர் பிரவீன் குமார் முள்லெலி பாதுகாப்பின் தேவை மற்றும் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குருவானவர்கள் எமில்சிங், பாஸ்கரன் பொன்னுச்சாமி தனசீலன், திருமறையூர் சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன்துரை, ஆலய பணியாளர் ஆபிரகாம் மற்றும் சபை மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக திருமறையூர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனை துறையின் இணை இயக்குனரும் திருமறையூர் சேகர தலைவருமாகிய ஜான் சாமுவேல் செய்திருந்தார்
த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

