நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. மற்றும் திருநெல்வேலி அருணா கார்டியோ கேர் இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம் முகாமினை திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். முகாமில் சர்க்கரை அளவ கண்டறிதல், ரத்த அழுத்தம், இசிஜி மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. திருநெல்வேலி அருணா கார்டியோ கேர் மருத்துவமனையில் இருந்து மருத்துவர் ராமதாஸ் தலைமையில் மருத்துவ குழுவினர் பங்கு பெற்று பொதுமக்களுக்கு பல்வேறு இலவச மருத்துவ சேவைகள் செய்தனர்.
இதில் நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருந்து திரளானோர் பங்கு பெற்று இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நாசரேத் ஒய். எம். சி.ஏ. நிர்வாகிகள் சாமுவேல்ராஜ், எபனேசர், புஷ்பராஜ், ஆம்ஸ்ட்ராங், லேவி அசோக் சுந்தர்ராஜ், இம்மானுவேல், ஜட்சன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445656

