திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியம்,திருப்பாலைவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பேரிடர் பல்நோக்கு மையத்தில் நடைபெற்றது. இதில் திருப்பாலைவனம், பிரளயம் பாக்கம், வஞ்சிவாக்கம், கடப்பாக்கம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து மனு அளித்து உடனடி தீர்வு காணும் விதத்தில் முகாமில் பங்கேற்றனர்.
முகாமினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் துவக்கி வைத்தார்.

இதில் சொத்து விரி விதிப்பு, சிட்டா, பட்டா பெயர் மாற்றம், பிறப்பு இறப்பு பதிவு செய்தல் ஆதார் கார்டு இணைப்பு, மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை விண்ணப்பித்தல் உள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உடனடி பரிசீலனை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி குணசேகரன் ஆகியோர் செய்தனர்.
இதில் திமுக நிர்வாகிகள் பகலவன், அன்புவாணன், முரளிதரன், பழவை முகம்மது அலவி, திருப்பாலைவனம் ராஜா தோனிரேவு முனிவேல் நமசிவாயம் பழவை மீரான்பாஷா காங்கிரஸ் நிர்வாகிகள் அத்திப்பட்டு புருஷோத்தமன் பழவை ஜெயசீலன், ஊராட்சி செயலர்கள் திருப்பாலைவனம் முருகன், தாஸ், நாகஜோதி கலை, குமார், சௌந்தரராஜன் முத்து ரமேஷ் மெதூர் தரணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

