நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சியில் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தனது சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 2வது வார்டு பிரகாசபுரம் ஆலய தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி யின் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை வகித்தார். நாசரேத் பேரூராட்சி துணைத்தலைவர் அருண் சாமுவேல் நாசரேத் பேரூராட்சி செயல்அலுவலர் திருமலை குமார், ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார், கோட்டாட்சியர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேவர் பிளாக் சாலைப் பணியைத் தொடங்கி வைத்தார்.
நாசரேத் பேரூராட்சி 4வது வார்டு பெத்தானியா நகரில் அரசின் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்தார். அதன்பின்னர் வகுத்தான்குப்பம் துவங்கி மோசஸ் தெரு வரை அமைக்கப்பட்டு வருகிற பேவர் பிளாக் சாலையை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் நாசரேத் கிராம நிர்வாக அதிகாரி மிக்கேல் ஜெரோசின் நாசரேத் நகர தி.மு.க. செயலாளர் ஜமீன் சாலமோன். முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார். மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம். மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் உமரிசங்கர். ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் நவீன், கிராம நிர்வாக அலுவலர் மிக்கேல் ஜெரோசின், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாமுவேல், ஜேம்ஸ்,அணி சாலமோன். அதிசயமணி, ரவீந்திரன். ஜெயா, சவுந்திரம், பெனிட்ரோ தினகரன்நகர துணைச் செயலாளர் மாரிமுத்து, , தகவல் தொழில்நுட்ப ராஜ்குமார், நகர அவைத்தலைவர் கருத்தையா, அமைச்சர் உதவியாளர் கிருபாகரன். பிரகாசபுரம் சி எஸ்ஐ சர்ச் சேகர செயலாளர் மோகன், முன்னாள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் கேடி சி ஸ்டிபன், கல்லூரி முன்னாள் தாளாளர் மாமல்லன். காமராஜர் ஆதித்தனார் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஐஜினஸ்குமார், வார்டு செயலாளர்கள் அன்பு தங்கபாண்டி, மனோகரன், மூக்குப்பீறி கலையரசு. பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் . பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655
.

