Thu. Jan 15th, 2026

விளையாட்டில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா

பாளையங்கோட்டை மேட்டுத்திடல் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் ஸ்ரீ காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளியில் பிளஸ் டூ பயின்று வரும் மாணவி ரோஸ்னி குத்துச்சண்டை போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார். பத்தாவது வகுப்பு பயிலும் மாணவி பவித்ரா சிலம்பப் போட்டியில் வட்டார அளவில் மூன்றாவது பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.

இம் மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை கீதா மற்றும் சமூக ஆர்வலர் வெங்கடாம்பட்டி திருமாறன் ஆகியோர் மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை பத்ரகாளி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Post