நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை திருமறையூர் மரூறுப ஆலயத்தில் சிறப்பு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனையில் சேகர தலைவர் ஜான் சாமுவேல் செய்தி அளித்தார்.
ஆராதனை நிறைவு பெற்றவுடன் தேசியக் கொடியேற்று ம் நிகழ்ச்சி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற குருவானவர் பொன்னுசாமி ஆரம்ப ஜபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பெங்களூர் கல்வாரி சேப்பல் டிரஸ்ட் நிறுவனர் குணசேகரன் தேசியக்கொடி ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கல்வாரி சேப்பல் ஹோம் இயக்குனர் சுதாகர், ஆலய சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை மறுரூப ஆலய மூப்பர்கள் ஆலய பாடகர் குழுவினர், ஆலய பணியாளர் ஆபிரகாம் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ஓய்வு பெற்ற குருவானவர் பொன்னுசாமி அந்தோணி தாஸ் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். ஏற்ப்பாடுகளை சேகர தலைவர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்.
த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

