நாசரேத் பகுதிகளில் 79 வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார்.பள்ளி தலைவர் எலிசபெத் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் செந்தில் குமார் தேசிய கொடியேற்றினார். மாணவிகள் மெலோசா, ஜெனிபர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவி வைஷ்ணவி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் மாரிதங்கம் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சியில் சுதந்திர தின விழா நடந்தது. பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். துணை தலைவர் அருண் சாமுவேல், செயல் அலுவலர் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், துப்புரவு ஆய்வாளர் முத்துவேல், சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் சுதந்திர தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் சோபியா ஞானமேரி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.
த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

