Thu. Jan 15th, 2026

நாசரேத் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா

நாசரேத் ஜெயராஜ் அ ன்ன பாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழ் தாய் வாழ்த்துடன் சுதந்திர தினம் விழா துவங்கியது. கல்லூரி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல் பாடினர். விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

ஆட்டோமொபைல் துறை தலைவர் ஜாண்வெஸ்லி உறுதிமொழியை வாசித்தார். முடிவில் சிவில் துறை தலைவர் ரஞ்சன் குணராஜ் நன்றி கூறினார். நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. நிகழ்ச்சிகளை ஆசிரியர் வெலிங்டன் தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் சந்தோஷம் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் தாளாளர் முனைவர் ராமா தலைமையில் முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன், உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post