பொன்னேரி மெதூர் சாலை கல்மேடு அருகே சாலை அமைக்கும் தார் கலக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுவினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் மற்றும் 2000 ஏக்கர் பரப்பளவில் உள்ள மெதூர் ஏரி அருகில் உள்ள வீடுகள் மாசு அடைவதாகவும் இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி விவசாயி வினோத் குமார் என்பவர் புகார் அளித்தார்
புகாரினை பெற்றுக் கொண்ட கும்மிடிப்பூண்டி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் (பொருப்பு) மற்றும் சென்னை கிண்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நடமாடும் காற்று தர கண்காணிப்பு நிலையம் மூலம் அப்பகுதிக்கு வந்து காற்றில் கலந்துள்ள மாசு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பரிசோதனை செய்யப்பட்டு ரிசல்ட் வந்தவுடன் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெ. மில்ட்டன், பொன்னேரி