பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து பொன்னேரியில் இஸ்லாமியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி சுற்றுவட்டார இல்லாமியர்கள் கானே குதா வாலாஜா ஜாமியா மஸ்ஜித் தலைவர் முகமது நிசாருதீன் தலைமையில் செயலாளர் இம்தியாஸ் அகமது முன்னிலையில் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி இஸ்ரேலை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
பாலஸ்தீனத்தில் கொத்து கொத்தாக மடிந்து வெள்ளை துணி போர்த்தி மூடி வரிசையாக வைக்கப்பட்டுள்ள சடலங்கள் போன்ற பொம்மைகளை வைத்து நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.
ஐநா சபை தமக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் மத்திய அரசு போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பங்காற்ற வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்
ஜெ. மில்ட்டன், பொன்னேரி