சாத்தான்குளத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் எதிரே அழகப்பன் என்பவர் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வருகிறார்
நேற்று இரவு அழகப்பன் கடையடைத்து சென்று விட்ட பிறகு மர்ம நபர்கள் பின்புற சுவற்றினை உடைத்து கடைக்குள் சென்றுள்ளனர்

பின்பு அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடி விட்டு முன்புற கதவினை உடைத்து முன்புறமாக வெளியே சென்று உள்ளனர்
சாத்தான்குளத்தின் மையப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதால்பொது மக்களிடையேபரபரப்பையும் அச்சத்தையும் உருவாக்கி உள்ளது