Sun. Aug 24th, 2025

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவள்ளூரில் திருநங்கைகளுக்கு ரூ.25, லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொன்னேரி கும்மிடிப்பூண்டி தொகுதிகளை சேர்ந்த 110 திருநங்கைகளுக்கு 25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஏற்பாட்டில் திமுக மாவட்ட கழக அலுவலகம்
வல்லூரில் நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறைஅமைச்சர் ஆவடி சா.மு. நாசர் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன், மாவட்ட துணைச் செயலாளர் கே வி ஜி உமா மகேஸ்வரி. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் சி எச் சேகர், கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்புவாணன், மாநில ஆயலாக அணி துணை செயலாளர் ஸ்டாலின், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ராபர்ட் ராஜதுரை, மாவட்ட நிர்வாகிகள். ரவி, கதிரவன், சுப்பிரமணி, பா.செ குணசேகரன், வெங்கடாஜலபதி, பரிமளம் விஸ்வநாதன், ராமமூர்த்தி, பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார்,
வல்லூர் தமிழரசன், அத்திபட்டு ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

ஜெ. மில்ட்டன், பொன்னேரி

Related Post