Sun. Aug 24th, 2025

சென்னை அருகே 8 லட்ச ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் –  இருவர் கைது

சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை செங்குன்றம் சாரகத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் பிடித்து விசாரித்த போது இருவரும் உனக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்ட போது அதில் 15 கிலோ கஞ்சா பொட்டலம், 1300 கோதை மாத்திரைகள் அடங்கிய ஆட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து அதனை பறிமுதல் செய்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் மெரட்டூர் பகுதியைச் சேர்ந்த அஜய் (25) செங்குன்றத்தைச் சேர்ந்த விஷ்வா (20) என்பதும் இவர்கள் சட்டவிரோதமாக முகவர்கள் மூலம் ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சா, மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்களை குறி வைத்து விற்பனை செய்து தெரியவந்தது

இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் இருவரையும் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஜெ. மில்ட்டன், பொன்னேரி

Related Post