தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் நாசரேத் கிராமம் வாழையடி பகுதியில் ஏழ்மை நிலையில் கண்ணன்(40) என்பவர் வசித்து வந்தார்.அவரது மனைவி தங்கமாரி ( 44) இவர்களுக்கு 12ம் வகுப்பு படிக்கும் பாரதி வயது 16 11ஆம் வகுப்பு படிக்கும் பவித்ரா வயது 15.ஆகிய இரண்டு மகள்களும் 7ம் வகுப்பு படிக்கும் பாலன் வயது 13 என்ற மகனும் உள்ளனர்.

இதில் கண்ணனின் மனைவி தங்கமாரி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகள் முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடுதிரும்ப வில்லை. அவரது தந்தை கண்ணன் அதிக குடிப்பழக்கத்திற்கு உள்ளானவர். அதனால் பிள்ளைகளை சரிவர கவனிக்காமல் இருந்து வந்தனர்.

தாய் தந்தையரின் நிலைமை இப்படி இருக்கையில் இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையின் கல்வி கேள்விக்குறியாக இருந்து வந்தது. இவர்கள் வசித்து வந்த வீடு மண்ணாலானது. ஓட்டு வீடு மின்சார வசதியும் இல்லை. அவர்கள் வசித்து வந்த வீடு முழுவதும் இடிந்து விழும் நிலையில் பக்க சுவர்கள் இடிந்து காணப்பட்ட நிலையில் இருந்தன.
இந்நிலையில் நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் என்பவர் கள ஆய்வுக்கு செல்லும் போது இந்நிலையை கண்டு உடனடியாக திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாரன் மற்றும் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன் அதிகாரிகள் இடம் தகவல் தெரிவித்து அவர்களின் முயற்சியின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்யும் பல்வேறு நபர்கள் உதவியுடன் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் வீடு கட்டி கொடுக்க முடிவு செய்து அதற்குரிய பணிகளை மே மாதத்தில் ஆரம்பித்து மூன்று மாதத்தில் முடித்தனர்
தற்போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் அந்த புதிதாக கட்டப்பட்ட வீட்டினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதற்காக அந்த குழந்தைகள் தங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததற்கு அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி, நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவராமன், மிக்கேல் ஜெரோசின், கிராம உதவியாளர் சத்தியசீலன் தன்னார்வலர் குருமணி, சங்கர், ஆசிரியர் குணாளன், தனியார் நிதி நிறுவன மேலாளர் இசக்கிமுத்து மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை உருவாக்கியது.
ஏழை மாணவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கு பாடுபட்ட நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாரன் மற்றும் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர்களை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்
பொதுமக்களுடனும் இணைந்து புன்னகை தேசம் வார இதழும் வருவாய்த் துறையினரின் மனிதாபிமான சேவையை மனதார பாராட்டி வாழ்த்துகிறோம்.
த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655