நாசரேத் அருகே மூக்குப்பீறி தபால் அலுவலகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தொடக்க விழா நடைபெற்றது.
மூக்குப்பீறி அஞ்சல் அலுவலர் செல்வ சிங் வரவேற்று பேசினார். இதில்சுமார் 20 பள்ளி குழந்தைகளுக்கு புதிய சேமிப்பு கணக்கு தொடக்கப்பட்டது.
இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க பொது செயலாளர் கனல் ஆறுமுகம் கலந்து கொண்டு செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு அட்டைகளை குழந்தைகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சாத்தான்குளம் அஞ்சலக கோட்ட ஆய்வாளர் சுடலைமுத்து, மூக்குப்பீறி அஞ்சல் அலுவலர் செல்வ சிங், உதவி அலுவலர் ஜெயலட்சுமி முத்துகிருஷ்ணன் தூய மாற்கு மழலையர் பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகரதி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர் புன்னகை தேசம் நிருபர்9487445655