நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரம் மேலத் தெருவில் வசித்துவரும் அருள் சுந்தர் . இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்கிறார். இவரது மனைவி சத்துணவு பணியாளராக வேலை செய்து வருகிறார். மூத்த மகன் ஜான் பிரபாகரன் வயது 27. கார் கம்பெனியில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகஜான் பிரபாகர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். மேலும் குடி பழக்கம் காரணமாக கடன் அதிகம் வாங்கி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அருள் சுந்தர் பெயிண்டிங் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டார்.
அன்று மாலை வேலை முடிந்து வந்த அருண் சுந்தர் வீட்டுக்கு வந்து கதவை பலமுறை தட்டியும் திறக்க வில்லை. இதனால் உள்ளே சென்று பார்த்த போது மூத்த மகன் ஜான் பிரபாகர் தூக்கு போட்டு தொங்கிய தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருள் சுந்தர் இதுகுறித்து நாசரேத் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தார். இச் சம்பவத்தை தொடர்பாக நாசரேத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655