பெருங்குளம் கவிஞர் மணிமொழிச் செழியனின் தமிழ் பணியைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தைச் சேர்ந்த கவிஞர் மணிமொழிச் செல்வன் திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான கே.ஆர்.பி. மணிமொழியனின் மூத்த மகனாவார். சிறந்த இலக்கிய ஆன்மீக சொற்பொழிவாளரான இவருக்கு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் “ஆன்மீகத் தென்றல்” என்ற பட்டம் வழங்கி பாராட்டினார்.
மேலும் கவிஞர் மணிமொழிச் செல்வன் பத்திரிக்கைத் துறையின் தலைசிறந்த புத்தக நிலையங்களில் ஒன்றான மணிமேகலை பிரசுரத்தின் ஆஸ்தான எழுத்தாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் எழுதிய “நமக்கான நாள்வரும்” என்ற கவிதை நூலுக்கும் “விலை நிலங்களாக மாறிய விளை நிலங்கள்” என்ற சிந்தனை கட்டுரை நூல்களுக்கும் அமெரிக்கத் தமிழ் பல்கலைக்கழகத்தில் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
திருக்குறளில் 133 அதிகாரங்களுக்கும் எளிமையான விளக்கங்கள் என்ற நூலை கவிதை வடிவில் வெளியிட்டு அந்நூலுக்கும் மனிதநேய அறக்கட்டளை மற்றும் ஒலிம்பிக் நிறுவனத்தின் ரொக்க பரிசும் பெற்றுள்ளார். அனுபவம் வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டி ,நட்பை போற்றுவோம் என்ற சிந்தனை கட்டுரைநூல்களும் இவருடைய எழுத்தாக்கத்திற்கு சிறப்பு பெற்றுள்ளது.
நூல் வயல் பதிப்பகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ள அப்பச்சி என்ற கவிதை நூலும், பழனியில் வெளியீடு செய்யப்பட்ட “மாண்புமிகு மனைவி” என்ற கவிதை நூலானது தலைசிறந்த கவிதை நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற போதிலும் பல்வேறு விதமாக தமிழுக்கு பணியாற்றிய பெருங்குளம் கவிஞர் மணிமொழிச் செல்வனின் தமிழ்ச் சேவையைப் பாராட்டி சென்னை தமிழ் இணைய கல்வி கழகத்தின் அரங்கத்தில் “பைன் ஆர்ட்ஸ்” ன் நிர்வாக இயக்குனர் டாக்டர்.ஆர். பன்னீர்செல்வம், குளோபல் அக்சரைஸ் கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் ஆர்.செல்வம், திரைப்பட இயக்குனர் மற்றும் வசனகர்த்தா லியாகத் அலிகான்,
திரைப்பட நடிகர் சின்னிஜெயந்த்,
பூவிலங்கு மோகன் காவல்துறையின் முன்னாள் தலைவர் ராஜாராம்,
டெல்லி உயர்நீதி மன்றத்தின் சிறப்பு வழக்கறிஞர் எம். பக்தவச்சலம்,
ஆகியோர்களின் முன்னிலையில், சுதந்திரப் போராட்ட தியாகியும், தமிழ்நாடு அரசின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர். ஹெச்.வி. ஹண்டே அவர்களால் மணிமொழிச் செல்வனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் முதுநிலை வங்கி ஆலோசனை அலுவலர் சங்கீத் ஐயர், சாதனை நாயகன் இட்லி இனியவன், டாக்டர் அப்துல் மாலிக், இந்து மக்கள் சக்தியின் மாநில செயலாளர் டாக்டர் காஞ்சி முத்து, சமூக சேவகர் டாக்டர் தமீம், டாக்டர் ஜின்னா, டாக்டர் கே.வி.கணேசன், இந்திய கலாச்சார கலை இலக்கியத்தின் மாநிலத் தலைவர் டாக்டர். லயன்ராஜா, டாக்டர் நவோஜி, ஆன்மீகத் தொண்டர் டாக்டர்.பி.எஸ். நாராயணா, டாக்டர்.ரேஷ்மா பர்வீன், தமிழ்நாடு மின்வாரியத்தின் உதவி இயக்குனர் கவிஞர் எழுத்தாளர் கலக்கல் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655