நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடந்தது. நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடந்தது.
தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் தாளாளர் ரமா தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார். சிவில் துறை தலைவர் ரஞ்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி ஊழியர்கள் முகாமை நடத்தினர்.
மொத்தம் 262 பேர்களுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கல்லூரி பர்சார் தனபால் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ், உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

