நாசரேத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு நிறைவு விழாவில் அரசுக்கு கூட்டத்தில் 70 வயது முடிந்த ஓய்வு ஊதியவருக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்,
நாசரேத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு நிறைவு விழா நடந்தது. நாசரேத் கஸ்பா பாட சாலையில் தமிழ் நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க நாசரேத் வட்ட கிளையின் 62 வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
வட்ட தலைவர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். துணை தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். செயலாளர் கொம்பையா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் ஜான் வரவு செலவு கணக்கை வாசித்தார்.

கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மண்டல துணை தலைவர் தங்கவேல், மாவட்ட செயலாளர் பாண்டி, திருவைகுண்டம் வட்ட தலைவர் வெங்கடாச்சாரி, கோவில்பட்டி வட்ட பொருளாளர் விஜயன், திருச்செந்தூர் வட்ட தலைவர் கண்ணன், மூத்த உறுப்பினர்கள் காசிராசன், சொர்ணமாணிக்கம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் 70 வயது முடிந்த ஓய்வு ஊதியவருக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், வந்தே பாரத் ரயிலுக்கு இணைப்பு ரயிலாக திருச்செந்தூரில் இருந்து ரயில் இயக்க வேண்டும், நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து நாசரேத் , உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளத்திற்கு இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள் அடிக்கடி மாயமாகி விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுவதால் அரசு பஸ்களை தினமும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக 106 வயதை தாண்டிய ஓய்வூதியர் டேனியல் சுந்தர்ராஜை அவரது இல்லத்தில் சந்தித்து மரியாதை செலுத்தினர். இதில் வட்ட இணைச்செயலாளர் சார்லஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். முடிவில்
செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன் நன்றி கூறினார்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655