காயல்பட்டணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப்பாதையில் சாதனை இளைஞர்கள்” கருத்தரங்கம் நடந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையின் ”முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்” என்ற செயல் திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ”சத்தியப்பாதையில் சாதனை இளைஞர்கள்” ஒருங்கிணைப்பு கருத்தரங்கம் காயல்பட்டணத்தில் நடந்தது.
கருத்தரங்கிற்கு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் நவாஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் இமாம்பரீத், மாவட்ட பொருளாளர் ரஷீத்காமில், மாவட்ட துணைச்செயலாளர்கள் சித்தீக், தௌலத்துல்லாஹ், மாவட்ட மாணவரணி செயலாளர் ரசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் இம்ரான் ”சாதனை இளைஞர்களுக்கான ஒருங்கிணைப்பின் அவசியம்” குறித்தும், மாவட்ட துணைச்செயலாளர் அசாருதீன் ”சமூக வலை தளமும் அதனை கையாளும் விதமும்” என்ற தலைப்பிலும், மாநில பேச்சாளர்கள் யாசர் ”கல்வியும் இன்றைய களமும்” என்ற தலைப்பிலும், அப்துல் ரஹ்மான் ”முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்” என்ற தலைப்பிலும் இளைஞர்களுக்கு செயல்திட்ட விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து, காயல்பட்டணம் ஒருவழிப்பாதை திட்டத்தை போக்குவரத்து காவலர்கள் மூலமாக முறையாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதியின் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கான 3.5சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக 7சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதில், கிளை தலைவர் சம்சுதீன், செயலாளர் பசீர், பொருளாளர் ஷெரிப் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.