நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை என்சிசி தரைப்படை பிரிவு எண் 158 சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதில், முதலாவது மற்றும் இரண்டாவது ஆண்டு மாணவர்கள் மொத்தமாக நூறு பேர் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர். என்சிசி பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் பல்வேறு பணிகளில் அகில இந்திய அளவில் பணியாற்றி வருகின்றனர்.
என்சிசி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அணிவகுப்பு பயிற்சிகளின் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
மேல்நிலைப்பிரிவு உதவி தலைமை ஆசிரியர் மெரிட்டன் சகரியா தலைமை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். ஹவில்தார் மேஜர் சுந்தர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
மாணவர்களுக்கு குழு அணிவகுப்புப் பயிற்சி, தொடர் அணி வகுப்புப் பயிற்சி, அணிவகுப்பின்போது வழங்கப்படும் ஒலிக் குறியீடுகள் குறித்த பயிற்சி நடந்தது. தேசிய மாணவர் படை குறித்த அறிமுகம், என்சிசி மாணவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதில் ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் மற்றும் என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை 9 சிக்னல் கம்பெனி கமெண்டிங் அதிகாரி டிஆர்டி சின்ஹா, பள்ளி தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர், தலைமை ஆசிரியர் குணசீலராஜ், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655