Tue. Aug 5th, 2025

நாசரேத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்! மக்கள் கூட்டம் அலைமோதியது

நாசரேத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி துவக்கி வைத்தார்.

நாசரேத் பேரூராட்சி ஜோதி மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. 1 முதல் 9 வார்டு மக்கள் கலந்து கொண்டனர்.

துணை ஆட்சியர் ஷீலா ( இஸ்ரோ) தலைமை வகித்தார். ஏரல் தாசில்தார் செல்வகுமார் , சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அந்தோணி ஜெபராஜ், பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், செயல் அலுவலர் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாசரேத் பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி குத்து விளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தார்.

முகாமில் 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 800 க்கு மேற்பட்ட பொது மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். சில மனுக்களுக்கு முகாமிலேயே தீர்வு காணப்பட்டது.

முகாமினை முன்னிட்டு உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் டாக்டர் நவீன்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஞான்ராஜ், திருவடிவாசன், இடை நிலை சுகாதார செவிலியர்கள் அபிளா, லீதியாள் மற்றும் சுகாதார பணியாளர்கள் முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.

இந்த மருத்துவ முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பரமசிவன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதில் முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன், ஆழ்வார்திருநகரி வருவாய் ஆய்வாளர் ஆண்டாள், நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள்,கிராம அலுவலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445656

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *