Mon. Aug 4th, 2025

மூக்குப்பீறியில் ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்ட சிறப்பு முகாம்

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடந்தது.முன்னாள் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி தாளாளரும், கிராம நலக்கமிட்டி செயலாளருமான செல்வின் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் 30 பேருக்கு ஆயுஸ்மான் பாரத் காப்பீடு அட்டை, 25 பேருக்கு முதலமைச்சர் இ. கார்டு அட்டை,45 பேருக்கு ஆதார் ஆவனம் புதுப்பித்தல், 3 பேரிடம்அனைத்து வருவாய் சான்றிதழ் விண்ணப்பம் பெறுதல், 15 பேருக்கு ஆதார் முகவரி மாற்றம் ஆகியவை நடந்தது.

இப்பணியில் வீரபாண்டியன்பட்டணம் பொது சேவை மையத்தை சார்ந்த சேர்மத்துரை, குரும்பூர் பொது சேவை மையத்தை சார்ந்த அபர்னா ஆகியோர் செயல்பட்டனர்.

இதில் ஆழ்வார்திருநகரி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் அருள் ராமேஸ்வரி, மூக்குப்பீறி மக்கள் நல பணியாளர் சித்திரைசெல்வி, சன்லைட் பில்டர்ஸ் உரிமையாளர் ஜஸ்டஸ் ரதீஷ் மற்றும் மகளிர்குழு உறுப்பினர்கள், பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர் புன்னகை தேசம் நிருபர் 9487445655

Related Post