நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டம் நூலக அரங்கில் வைத்து நடைபெற்றது.
வாசகர் வட்டத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான அய்யாக்குட்டி தலைமை தாங்கினார்கள். நூலகர் பொன்.ராதா முன்னிலை வகித்தார். ஒய்வு பெற்ற பேராசிரியர் காசிராசன் காணாமல் போன தமிழர் நாகரிகம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
நமது பழமையும், பண்பாடும் பேசப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தேரி இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன் கருத்துரை வழங்கினார். மேனாள் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி நிகழ்வை வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அருள்ராஜ், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவி செல்வகுமார், தொழிற்சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ், மருத்துவர் விஜய் ஆனந்த், கவிஞர் சிவா,மூக்குப்பீரி கவிஞர் ஞானராஜ் தேவதாசன், மதிமுக அவைத்தலைவர் இரஞ்சன், செல்லப்பாண்டியன், மாணிக்கம், ஜெபஸ், மனோகரன், ஜான் பிரிட்டோ, ஆசிரியர் விபின் குமார், ஜெபசிங், உடையார், விவேகானந்தன், தனுஷ்கோடி, கந்தசாமி, எல்ஐசி ஏஜெண்ட் கிறிஸ்டோபர் மந்திரம், கிங்ஸ்லி, ரத்னசிங், சிவா, லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் இலக்கிய ஆர்வலர் கண்ணன் நன்றி கூறினார்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655
