Thu. Jan 15th, 2026

நாசரேத் டவர் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா

நாசரேத் டவர் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது .

நாசரேத் ரெகோபாத் அரங்கில் வைத்து நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுநர்கள் லயன் சுதந்திரலட்சுமி லயன் டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைவர் லயன் ஜாண்சன், செயலாளர் லயன் அந்தோணி, பொருளாளர் லயன் டேனியல் மற்றும் பொறுப்பாளர்களை பதவி ஏற்பு செய்து வைத்தார்கள். மேலும் புதிய உறுப்பினர்களை கிளப்பில் இணைத்து வைத்து சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார்கள்.

இதைத் தொடர்ந்து நாசரேத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆண்டு 10ம் மற்றும் 12 ம் வகுப்பில் முதல் இரண்டு இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் பொருளாதாரத்தில் பின்தங்கிய 15 பேருக்கு 10 கிலோ அரிசி, 10 பெண்களுக்கு சேலைகள் மற்றும் 10 ஆண்களுக்கு சாரம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் வட்டாரத் தலைவர் லயன் அமிர்தராஜ், மண்டலத்தலைவர் லயன் ஆரோக்கியப்பழம்,லயன்ஸ் மாவட்ட பிஆர்ஒ லயன் வனமூர்த்தி, பட்டயத்தலைவர் லயன் டாக்டர் ஜெயசீலன் எம்ஜே எப் .பிஎஸ் டி கைடன்ஸ் லயன் பன்னீர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து திருமறையூர் முதியோர் இல்லத்திற்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

இதில் சாத்தான்குளம் ஸ்டார், சாயர்புரம் செபத்தையாபுரம், தூத்துக்குடி, தூத்துக்குடி மிட்டவுண், தூத்துக்குடி எபிசி திசையன்விளை, ஆறுமுகநேரி, டிசிடபுள்யூ சாகுபுரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கன்னியாக்குமரி, திருசெந்தூர் பல கிளப் முத்த தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post