தோழப்பன்பண்ணையில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணி நடந்தது.
தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ”ஓரணியில் தமிழ்நாடு” புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடந்து வருகிறது.
மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆறுமுகப்பெருமாள் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார் தலைமையில் ஸ்ரீவை ஒன்றிய செயலாளர் கொம்பையா, ஸ்ரீவை நகர செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோழப்பன்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் டிஜிட்டல் முறையில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகளை நேற்று தீவிரமாக மேற்கொண்டனர்.
அப்போது, ஏற்கனவே உள்ள கட்சியின் பழைய உறுப்பினர் விபரங்களையும் சரிபார்த்தனர். இப்பணியில், மாவட்ட பிரதிநிதி அருண்கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர்கள் கருப்பசாமி, பத்திரகாளி முத்து, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில், கிளை செயலாளர்கள் இசக்கிராஜா, சிவசுப்பு, இசக்கிபாண்டி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
