Mon. Aug 4th, 2025

ஆறாம்பண்ணையில் திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை

ஆறாம்பண்ணையில் திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி நடந்தது. தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறாம்பண்ணையில் ”ஓரணியில் தமிழ்நாடு” புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடந்தது.

மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகப்பெருமாள் தலைமையில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் காவல்காடு சொர்ணகுமார், ஆறுமுகப்பாண்டியன் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளரான பூத் முகவர் அப்துல்கரீம் ஆகியோர் வீடு வீடாக சென்று டிஜிட்டல் முறையில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டனர்.

தொடர்ந்து, அப்பகுதிகளிலுள்ள கடை வியாபாரிகள் மற்றும் சாலையோர கடைகளின் வியாபாரிகளையும் திமுக பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து புதிய உறுப்பினர்களாக சேர்த்தனர்.

இதுபோன்று ஆழ்வார்கற்குளம் பகுதிகளிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆழ்வார்கற்குளம் கிளை செயலாளர் அருணா, கவுன்சிலர் முருகன், திமுக நிர்வாகிகள் இப்ராஹிம், அப்துல்காதர், பண்ணை ஜின்னா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Post