Sun. Aug 3rd, 2025

மார்த்தாண்டம் அருகே அறக்கட்டளைகள் இணைந்து கொண்டாடிய கல்வி வளர்ச்சி நாள் விழா

காமராஜர் பிறந்த நாளாம் கல்வி வளர்ச்சி நாள் விழாவையொட்டி வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளை, நித்திரவிளை ஜோஸ் தீரஜ் பண்பாட்டு சேவா அறக்கட்டளை மற்றும் மார்த்தாண்டம் உதவும் சிறகுகள் அறக்கட்டளை ஆகிய அறக்கட்டளைகள் இணைந்து வாறுதட்டு மார் மத்தேயு காவுக்காட் நினைவு உயர்நிலைப் பள்ளியில் 2024-2025 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் வென்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பணமுடிப்பும் வழங்கி கவுரவித்தனர்.

விழாவில் வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளையின் தலைவர் என்.எம்.பிரேம்ராஜ், நித்திரவிளை ஜோஸ் தீரஜ் பண்பாட்டு சேவா அறக்கட்டளையின் உலக சாதனையாளர் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜோணி அமிர்த ஜோஸ், மார்த்தாண்டம் உதவும் சிறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர் சிவபாலன் ஆகியோர்

இணைந்து வாறுதட்டு மார் மத்தேயு காவுக்காட் நினைவு உயர்நிலைப் பள்ளியில் 2024-2025 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் 482 பெற்ற மாணவர் விஷ்ணு, இரண்டாம் மதிப்பெண் 446 பெற்ற மாணவர் ஜெர்லின், மாணவி ஏஞ்சல் மற்றும் மூன்றாம் மதிப்பெண் 436 பெற்ற மாணவர் ரீகன் ஆகியோரை அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலக கண்காணிப்பாளர் பொ.ச.விஜயகுமார் கலந்துகொண்டார்.

Related Post