நாசரேத்தில் தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 123வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
விழாவில் காமராஜர் ஆதித்தனார் கழகம் மாவட்டச் செயலர் ஐஜி தலைமை வகித்து வரவேற்று பேசினார்.

இவ்விழாவில்நலத் திட்ட உதவிகள் அரிசி மூடைகள் வழங்கப் பட்டன. இவ்விழாவில் நாசரேத் காவல்துறை ஆய்வாளர் வனசுந்தர் வாழ்த்துரை வழங்கினார். நாசரேத்து பேரூராட்சி தலைவி நிர்மலாரவி நலத்திட்ட உதவிகள் அரிசி மூடைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாசரேத்து மர்காஷிஸ் கல்லூரி ஒய்வு பெற்ற பேராசிரியர் காசிராஜன் காமராஜர் பற்றி பேசினார் . இதில் நாசரேத்து நகர திமுக செயலர் ஜமீன் சாலமோன், நாசரேத்து பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார், இந்திய கம்யூனிஸ்ட் தொழிற் சங்க மாவட்டச் செயலர் கிருஷ்ணராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக அவைத்தலைவர் இரஞ்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும்,தொழில் அதிபர்கள் புஷ்பம் அன்கோ செந்தில், ரூபா ஸ்டுடியோ உரிமையாளர் திலகர்,திமுக நிர்வாகி கலைஅரசு, நாசரேத் பேரூராட்சி மன்ற காங்கிரஸ் உறுப்பினரும் வியாபாரிகள் சங்க தலைவருமான எட்வர்ட் கண்ணப்பா, நாசரேத் வணிகர் சங்க தலைவர் செல்வன், நாசரேத் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அருண் சாமுவேல்,
நாசரேத் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பத்திரகாளி, ஜேம்ஸ், பெனிட்ரோ தினா, ரவீந்திரன், கந்தசாமிபுரம் வனக்குழு தலைவர் காமராஜ், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் இராஜ்குமார் பிரதிநிதி கருத்தையா, அமமுக நிர்வாகி கணேசன்,பாஜக தாமோதரன், அதிமுக தினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நாசரேத் கே வி கே சாமி சிலை, நாசரேத் பேருந்து நிலையம், நாசரேத் சந்தி, ஆழ்வார்திருநகரி மெயின் பஜார் போன்ற பகுதிகளில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாசரேத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி வரை சென்று மேளம் தாளத்துடன் பட்டாசுகள் வெடித்து ஊர்வலம் சென்றனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, காமராஜர் ஆதித்தனார் மாவட்ட செயலாளர் ஐஜின் தலைமையில் கழக இளைஞர் அணி ராம், டேனியல், மில் ரோடு ரவி, ஆட்டோ மகேஷ் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்..
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655
