Fri. Jan 16th, 2026

தட்டார்மடத்தில் கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் மேல நடுவகுறிச்சி சேர்ந்தவர் சண்முகசுந்தரம் என்பவரின் மகன் கந்தையா (வயது 48). கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் தட்டாரமுடைய அருகில் உள்ள தாமரை மொழியைச் சேர்ந்த அரசப்ப தேவர் மகன் சூரிய நாராயணன் என்பவரின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்துள்ளார்

இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்

கந்தையா தினமும் இரவு நேரத்தில் தட்டார்மடம் வருவது வழக்கம். வழக்கம்போல் இன்று இரவு தட்டார்மடத்தில் நின்று கொண்டிருக்கும் போது, அங்கு வந்த சூரிய நாராயணன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கந்தையாவை சரமாரியாக வெட்டினார்

இதில் படுகாயம் அடைந்த கந்தையா சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து அறிந்த தட்டார்மடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்படி கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Post