நாசரேத் அருகே பிரகாச புரம் புனித மரியன்னை நடுநிலைப் பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி நிர்வாகி அருட் தந்தை ஆரோக்கிய அமல் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் சகோதரி ஜாக்குலின் அருள் மேரி வரவேற்று பேசினார்.
விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைபோட்டி, மாறு வேடபோட்டி, சொற்ப்பொழிவு திறன் போட்டிகள் நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
விழாவில் சிறப்பு விருந்தினராக நாசரேத் பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர்தேவராஜ். சிதம்பராபுரம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை எட்விச் லிற்றில் மேரி, நாசரேத் பேரூராட்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவிசெல்வகுமார், திமுக தூத்துக்குடி மாவட்ட பிரதிநிதி தாமரைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655
