நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆசிரியர் பட்டு ராஜன் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி பாடகர் குழுவினர் இறைவணக்கப் பாடல்களை பாடினர். தலைமையாசிரியர் குணசீலராஜ் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தனபால் சத்ய சிகாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், மாணவர்களிடம் மனவளர்ச்சி, உடல் வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சி ஆகியவை ஒருங்கிணைந்து இருக்க வேண்டும், நன்கு படித்து நல்ல வேலைகளில் மாணவர்கள் அமர வேண்டும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமூகத்திற்கும், பெருமை தேடித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்திய நாடு என் வீடு என்ற பாடலுக்கு நடனமும், அன்பே காமராசர் என்ற தலைப்பில் நாடகமும் மாணவர்கள் நடத்தி காட்டினர். எட்டாம் வகுப்பு மாணவர் கோபி மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஜெய்சன் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் முருகன் காமராஜர் குறித்த கவிதை வாசித்தார். கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்கள் கராத்தே சிறப்பு நிகழ்ச்சியை வழங்கினர்.
பின்னர், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வரலாற்று ஆசிரியைகள் தங்கவின் நேசராணி மற்றும் சங்கீதா மேபல் வழிகாட்டுதலின்படி இந்திய தேசத்தின் வரைபடம் தத்ரூபமாக ரங்கோலியாக வரையப்பட்டது.
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு காமராஜர் உருவம் கொண்ட வண்ண ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ் ஆசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தமிழ் ஆசிரியர் வின்ஸ்டன் ஜோஸ்வா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், விவசாய பிரிவு தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன்பாபு, ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், தமிழ் ஆசிரியைகள் செல்வம், ரூபி பொற்செல்வி, பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655
