Sat. Aug 2nd, 2025

சாத்தான்குளம் பகுதி பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா

சாத்தான்குளம், புத்தன்தருவை பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் டிஎன்டிடிஏஆர்எம்பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. முன்னாள் பேரூராட்சித் தலைவர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் செல்லப்பாண்டியன் வரவேற்றார். பள்ளி ஆசிரியை கிறிஸ்டி பாய் நவமணி ஆரம்ப ஜெபம் நடத்தினார். மாணவ, மாணவிகள் காமராஜரை பற்றி கவிதை, சொற்பொழிவ ஆற்றினர். சிறப்பு விருந்தினராக ஜெபாசெல்வின் கலந்து கொண்டு பேசினார். ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் சாத்தான்குளம் தேவி ஸ்ரீ அழகம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து தொண்டனர். தமிழ் ஆசிரியை பெனிட்டா சுஜி நன்றி கூறினார்.

சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்து பரிசு வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள டி டிடி ஏ தூய மிகா வேல் மேல்நிலைப்பள்ளி பெருந்தலைவர் காமராஜ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர்டிடிடிஏ தூய பிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் டி டிடி ஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்குசேகர குருவானவர் செல்வன் மகாராஜா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் எடிசன் வரவேற்றார். சபை ஊழியர் இம்மானுவேல் பீட்டர் ஆரம்ப ஜெபம் நடத்தினர். இதில் மாணவ மாணவிகள் பெருந்தலைவர் காமராஜர் குறித்து சொற்பொழிவு மற்றும் கவிதை வாசித்தனர். மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் சிங்காரவேல், பங்கேற்று போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் இனிப்பு வழங்கினார். சிறப்பு விருந்தினராக பழைய மாணவர் ஸ்டான்லி ஞானபிரகாஷ் பங்கேற்று, கடந்த கல்வியாண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை பாராட்டி மிக்ஸி, கிரைண்டர், மற்றும் பேன் வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள் ஜோஸ்ரெனிதன், மோசஸ் தேவனேசன், இமானுவேல், ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆசிரியை சுஜிதா ரேச்சல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் , ஆசிரியர் செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை தமிழ்ச்செல்வி வசந்தா நன்றி கூறினார்.

Related Post