சாத்தான்குளத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மாலையணிவித்து மரியாலை செலுத்தினர்.

சாத்தான்குளத்தில் வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் நகரத் தலைவர் வேணுகோபால், வட்டாரத் தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், பிரபு, மாவட்ட மீனவரணி தலைவர் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர் சங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜோசப் அலெக்ஸ், ,லிங்கபாண்டி, மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட மணிநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் தூத்துக்குடி தெற்குமாவட்ட பாஜக தலைவர் ஆர். சித்ராங்கதன் தலைமை வகித்து காமராஜரின் திருஉருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு தலைவர் சுரேஷ்ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்ஆனந்த், மற்றும் டார்வின், அன்னகணேசன், சரவணக்குட்டி, பிரபு, விஸ்வநாதன், வீரபாகு உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்றிய பாஜக சார்பில் பெருநத்லைவர் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட பொதுச் செயலர் செல்வராஜ் தலைமையில் ஒன்றிய தலைவர் சரவணன் முன்னிலையில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலையணித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய பொதுச் செயலர் ராஜேஷ், ஒன்றிய துணைத் தலைவர் நவநீதன், மாவட்ட பிரச்சார பிரிவு செயலர் ஜோசப், மாவட்ட அமைப்பு சாரா பிரவு செயலர் ராம்மோகன், மற்றும் பாஜக நிர்வாகிகள் ராகவன், ரவிச்சந்திரன், மங்கையர்கரசி, மணிகண்டன், ஜெயசுந்தர்ராஜ், ராம்சுந்தர், படுக்கப்பத்து பாடகர் சிவசாமி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் வட்டார தமாகா சார்பில் நடந்த விழாவில் தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நெடுங்குளம் காமராஜர் சிலைக்கு மாலையணிவித்தார். தொடர்ந்து மீன் குழம்பு உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மேற்கு மாவட்டத் தலைவர் முரசொலிமாறன் மாவட்ட மகளிரணி தலைவர் தங்கத்தாய்,, வட்டாரத் தலைவர்கள் முரளி கார்த்திக், ஐயப்பன், விஜய், எமல்டன். தூத்துக்குடி மாநகரத் தலைவர் ரவிக்குமார், மாநில இணை செயலாளர் திருப்பதி, மாணவரணி மாவட்டத் தலைவர் மதன்பாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடியில் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் தலைமை வகித்து மாலை அணிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதி பாண்டியன் வரவேற்றார். காமராஜர் நற்பணி மன்ற தலைவர் ஆல்வின், செயலாளர் பாலமுருகன், துணைத் தலைவர் முத்து செல்வன், கதிர்வேல், ஆர்த்திசெல்வன்,கிராம காங்கிரஸ் கமிட்டித் தலைவர் விஜயேந்திர பாண்டியன், ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜகிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வழக்குரைஞர் ஏசுதாசன் செய்திருந்தார்.

தட்டார்மடத்தில் நடந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்விழாவில் தெற்கு ஒன்றிய திமுக செயலர் டாக்டர் ஆ. பாலமுருகன் தலைமை வகித்து அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் ரனிஷ் ,ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சந்திரசேகர்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி முருகேசன் ஆசிரியர், தட்டார் மடம் அன்னாள்நகர் கிளைச் செயலாளர் ஜோசப்ஆல்டன், தெற்கு நரையன்குடியிருப்பு கிளைச் செயலாளர் சித்திரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
