Thu. Jan 15th, 2026

நாசரேத்தில் கராத்தே கருப்பு பட்டைய தேர்ச்சி போட்டி

நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியில் சார்பாக கருப்பு கராத்தே பட்டைய தேர்வு போட்டி நடைபெற்றது. ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி மாணவர்களை தேர்வு செய்தார்.

சிறப்பு விருந்தினராக நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறிய கராத்தே கருப்பு பட்டயமும் சான்றிதழும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் பெரியதுரை, ஜான், மாஸ்டர் சபரி, குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மாஸ்டர் கராத்தே டென்னிசன் செய்திருந்தார்.

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445656

Related Post