Mon. Aug 4th, 2025

ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, பங்கேற்பு

ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, பங்கேற்றார்.

ஸ்ரீவை வட்டார காங்கிரஸ், நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான காமராஜர் பிறந்தநாள் விழா எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு, ஸ்ரீவை வட்டார தலைவர் நல்லக்கண்ணு, நகர தலைவர் கருப்பசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

விழாவில், ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பெருந்தலைவர் காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு, மதிய உணவு வழங்கினார்.

இதில், மாவட்ட துணை தலைவர் சங்கர், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவகளைபிச்சையா, சீனிராஜேந்திரன், நிலமுடையான், அலங்காரப்பாண்டியன், மாவட்ட அமைப்புசாரா தலைவர் முருகன், மாவட்ட மகளிரணி தலைவி மாரியம்மாள், மாவட்ட செயலாளர் ஜாய்ஸ், சேவாதள நிர்வாகிகள் பிச்சைக்கண்ணன், சித்திரை, முன்னாள் வட்டார தலைவர் சிங்கப்பன், இளைஞர் காங். பொதுசெயலாளர் மகாராஜன், நகர செயலாளர்கள் டிப்டாப் மாசானம், சரத்பாலன், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், நகர துணை தலைவர் புகாரி, கிராம கமிட்டி நிர்வாகிகள் அப்பன்கோவில் ராமச்சந்திரன், வெள்ளூர்மகேஷ், பால்ராஜ், சுடலை, வில்கின்ஸ், சண்முகசுந்தரம், நவாஸ், சிந்தியா, இசக்கி, முத்துக்குமார் மற்றும் ஜேம்ஸ், அமச்சார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Post