நாசரேத் மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்வார் திருநகரி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மற்றும் மூக்குப்பீறி கிராம நலக்கமிட்டி சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் நிலைய கட்டிடங்கள் பராமரித்தல் மற்றும் 3 அறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
தூய மாற்கு ஆலய சேகர தலைவர் ஞானசிங் எட்வின் தலைமை வகித்து ஜெபித்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார். முன்னாள் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி தாளாளரும், கிராம நலக்கமிட்டி செயலாளருமான செல்வின், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சோனியா, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் குழந்தைகள் நலத்திட்ட மருத்துவர் கல்யாணி, சித்த மருத்துவர் ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், முன்னாள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் ஆண்ட்ரூஸ், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சமுதாய வளர்ச்சி அலுவலர் சிநேகா, கிராம வளர்ச்சி அலுவலர் அருள் ராமேஸ்வரி, முன்னாள் மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஆனந்த ஜோதிபாலன், முன்னாள் கிளை மேலாளர் அருள்மணி, ஒய்யான்குடி திமுக கிளை செயலாளர் மோசஸ் கிருபைராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ( பொறுப்பு) பால் ஆபிரகாம், மக்கள் நல பணியாளர் சித்திரைசெல்வி,தங்கராஜ், செவிலியர் கள் பிரம்ம சக்தி, பானுப்பிரியா மற்றும் நிலைய ஊழியர்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655