Sat. Aug 2nd, 2025

உடையார்குளத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

நாசரேத் அருகே உடையார்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவிற்கு தூத்துக்குடி பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் வக்கீல் மகேந்திரன் தலைமை வகித்து காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் பெலிக்ஸ், மாவட்ட கவுன்சிலர் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராசாத்தி, நாசரேத் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவி செல்வகுமார், துணைத்தலைவர் தம்பு என்ற அருண் சாமுவேல், கவுன்சிலர்கள் அதிசயமணி, சாமுவேல், சாலமோன், விக்டர், ஜுலியட், பீட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை செல்வராஜ் செய்திருந்தார்.

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post