நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாரத சாரணர் இயக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்து, இந்தக் கல்வி ஆண்டில் புதிதாக இணைந்துள்ள சாரணர் இயக்க மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினார்.
உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். சாரணர் இயக்கத்தின் தோற்றம், வரலாறு மற்றும் அதன் பணிகள், சாரணர் அணியும் சீருடையின் முக்கியத்துவம், சாரணர் இயக்க மாணவர்கள் வணக்கம் செலுத்தும் முறை, ஒருவரோடு சந்திக்கும் பொழுது கை கொடுக்கும் முறை ஆகியவற்றின் புதுமை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
ஏற்பாடுகளை திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க பொருளாளர் ஆபிரகாம் இம்மானுவேல், துணைச் செயலாளர் ஜெர்சோம் ஜெபராஜ், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க இணை பொறுப்பாசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

