Mon. Aug 4th, 2025

ஸ்ரீவை  – கொங்கராயக்குறிச்சி வழித்தடத்தில் புதிய டவுன் பஸ்

ஸ்ரீவைகுண்டம்:ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கொங்கராயக்குறிச்சிக்கு இயக்கப்படும் டவுன் பஸ் பழமையானதால் புதிய விடியல் பயண டவுன் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்அடிப்படையில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசிஅமிர்தராஜ் ஏற்பாட்டில் புதிய பஸ் விடப்பட்டுள்ளது.

இந்த புதிய பஸ் இயக்க விழா ஸ்ரீவை பஸ் ஸ்டாண்டில் நடந்தது.ஸ்ரீவை வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் கிளை மேலாளர் ஜேக்கப், திமுக மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள், ஸ்ரீவை ஒன்றிய செயலாளர் கொம்பையா, நகர செயலாளர் சுப்புராஜ் கொடி அசைத்து புதிய பஸ்சை தொடங்கி வைத்தனர்.

அதன்பின்பு, பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் சிவகளை பிச்சையா, சீனிராஜேந்திரன், நிலமுடையான், மாவட்ட மகளிரணி செயலாளர் மாரியம்மாள், மாவட்ட அமைப்புசாரா தலைவர் முருகன், மாவட்ட சேவாளதள தலைவர் பிச்சைக்கண்ணன், வக்கீல் பாலசுப்பிரமணியன், கிராம கமிட்டி சுடலை, வெள்ளூர்மகேஷ், ராமச்சந்திரன், சரத்பாலன், இளைஞர் காங்.தொகுதி பொறுப்£ளர் ஜேம்ஸ், ஐஎன்டியுசி செயலாளர் சுப்பையா, மாவட்ட திமுக பிரதிநிதிகள் சண்முகசுந்தரம், அருண்கிருஷ்ணன், திமுக ஒன்றிய பொருளாளர் பத்திரகாளிமுத்து, அரசு வக்கீல் ஜாஷகான், தொமுசா நிர்வாகிகள் முத்துராமலிங்கம், ராமச்சந்திரன், வார்டு செயலாளர்கள் அண்ணாமலை, முத்துகிருஷ்ணன், கவுன்சிலர் சாலமோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Post