நேற்று திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற ரயிலில் ஆண் ஒருவர் அடிபட்டு கை மற்றும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நாசரேத் ஆழ்வார் திருநகரி செல்லும் ரயில் தண்டவாளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரதேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்.

இறந்த நபர் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என்றும் மஞ்சள் நிற சட்டையும் அணிந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. போலீஸார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர் யார்? எவ்வாறு ரயிலில் அடிபட்டு இறந்தார் என்பது குறித்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655