நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் கிராமப்புறத் தமிழ் மன்ற கூட்டம் நடந்தது.
ஓய்வு பெற்ற ஆசிரியர் அருள்ராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செல்வன் முன்னிலை வகித்தார். நெல்லை கவிஞர். சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடினார்.
மன்ற நிறுவனர் கவிஞர் மூக்குப்பீறி தேவதாசன் திருக்குறள் விளக்கம் கூறி வரவேற்றார்.
கூட்டத்தில் கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி எழுதிய “அரண்மனை நகரில் அமுதத்தமிழ்”, “மறைவேது உனக்கு மன்னவா”, என்ற இரண்டு நூல்களை ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி, கவிஞர் தேவதாசன் ஆகியோர் திறனாய்வு செய்தனர்.
நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவிசெல்வக்குமார், சமாரியன் இயற்கை உணவக மருத்துவர் விஜய் ஆனந்த், நாவல் ஆசிரியர் கண்ணகுமாரவிஸ்வரூபன், நெல்லை கவிஞர் பிரபு, அங்கமங்கலம் அன்பழகன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி ஏற்புரை நிகழ்த்தினார். இதில் ஜாண்பிரிட்டோ, மந்திரம், ஆல்வின், கவிஞர் சிவா, வண்னை துரைராஜ், நெல்லை மாணிக்கவாசகம், வார்டு கவுன்சிலர் ரீட்டா, ஜமிலா, தங்கமணி, தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மன்ற உறுப்பினர் ஆசிரியர் விவின் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655